டெல்லி
இன்று ரக்சாபந்தன் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்..
இன்று நாடு முழுவதும் ரக்சாபந்தன் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ரக்சாபந்தன் சகோதர, சகோதரிகளுக்கு இடையே உள்ள பிணைப்பை கொண்டாடும் பண்டிகையாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த தினத்தில் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில்,
“இந்த ரக்சாபந்தன் தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
சகோதர சகோதரிகளிடையே அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை உணர்வை அடிப்படையாக கொண்ட இந்த பண்டிகை, அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசம் மற்றும் மதிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த பண்டிகை தினத்தில், நம்முடைய சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் மதிப்பை உறுதி செய்வோம் என நாட்டிலுள்ள ஆண்மக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்”
என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.