தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்ட பிரகாஷ்ராஜிடம் அவரது குரல் வளைக்கு ஓய்வு கொடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் பகிர்ந்துள்ளார்.

”மருத்துவர்களிடம் முழுமையான பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது குரல் வளைக்கு மட்டும் ஒரு வாரம் ஓய்வு தேவைப்படுகிறது. எனவே நான் மவுன விரதம் இருந்து ஆழ்ந்த அமைதிக்குச் செல்லப் போகிறேன்” என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.