விஷால் – ஆர்யா இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘எனிமி’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.

மிருணாளினி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் ‘எனிமி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தனுஷின் பழைய மேலாளரான வினோத் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் படக்குழுவினருடன் இணைந்துள்ளார். ஊட்டி ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பிரகாஷ் ராஜ் உள்ள புகைப்படத்தை வெளியிட்டார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். இயக்குனர் ஆனந்த் சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கடைசியாக அற்புத நடிகர் பிரகாஷ்ராஜ் சார் எங்கள் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். எதிரிகளின் எஜமானர் என்றும் தெரிவித்துள்ளார்.