நடிகர் பிரபாஸ், ஷரத்தா கபூர் நடித்த படம் சாஹோ. பாகுபலிக்கு பிறகு பெரிய எதிர்ப் பார்ப்புடன் பிரபாஸுக்கு இப்படம் வெளி யானது. இப்படத்தின் இயக்குனர் சுஜீத். இவரும், பிரவலிகா என்பவரும் நீண்ட வருடங்களாக நட்பில் இருந்தனர். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதுகுறித்து குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். அவர்கள் சம்மதத்துடன் எளிய முறையில் கொரோனா தடைக்கால விதிமுறைகள் பின்பற்றி திருமண நிச்சயாதார்த்தம் நடந்தது. இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணம் எப்போது என்பது பற்றி விரைவில் தெரிவிக்கிறோம் என்றார் சுஜீத்.