தைப் பொங்கலையொட்டி, தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் உமன் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என்றும், கடந்த டிசம்பர் 19ந்தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி, ஜனவரி 4-ம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக ரூ. 5,600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையும் டிசம்பர் 21ந்தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடங்கி உள்ளது. இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுக்கான டோக்கனை டிச.31 வரை வீடு தேடி சென்று ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பாக, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.