புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் 15 தொகுதிகளில போட்டியிடுகிறது. திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட், விசிக தலா 1 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ்  வெளியிட்டுள்ளது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குண்டுராவ், வீரப்ப மொய்லி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:

* மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* அங்கன்வாடி ஊழியர்களுக்கு போனஸ்.

* நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை.

* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறப்படும்.

* புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

* ஆதிதிராவிடர் வாரியத்தின் மூலம் வாங்கப்பட்ட கடன்கள் முழுமையாக ரத்து.