கிராமிய பாடகராக புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதியினர் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் விஹா என்ற ஆர்கானிக் சோப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இங்கு வேலை செய்து வந்த சிறுமிகள் சம்பளத்தை கேட்டதற்கு, தங்களை அடைத்து வைத்து, தாயை வர சொல்லி, அவர் காலில் விழுந்தால்தான் விடுவேன்” என மிரட்டியதாக குப்புசாமி குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமிகள் கூறியது அணைத்தும் பொய் என தெரிய வந்துள்ளது.

மேலும் புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவியும் இல்லாத நேரத்தில், அங்கு தாயுடன் சிறுமிகள் வந்து ரகளை செய்ததும், குப்புசாமியின் மகளை அடித்ததும் பதிவாகியுள்ளது.

 

[youtube-feed feed=1]