
இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். “விஸ்வாசம்” படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.
தீரன் அதிகாரம் ஒன்று, தலைவா படங்களில் வில்லனாக நடித்த நடிகர் அபிமன்யூ சிங், அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி படம் வெளியாகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியான நேற்று வெளியானது. இதனை ரசிகர்கள் கன்னாபின்னாவென கொண்டாடி வருகின்றனர். நேற்று முதல் #Annaththe என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் ட்ரெண்ட்டாகி தெறிக்கவிட்டு வருகிறது.
அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் காட்டுமிராண்டித்தனமாக கொண்டாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பேனருக்கு முன்பு தாரை தப்பட்டையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் ஒரு ஆட்டு கிடாவை துடிதுடிக்க வெட்டி பலி கொடுத்துள்ளனர்.
பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அந்த ஆட்டை பேனரின் மீது தூக்கி காட்டி ஆட்டு ரத்தத்தில் அபிஷேகம் செய்துள்ளனர். சுற்றிலும் சிறுவர்களும் குழந்தைகளும் நிற்க இப்படி ஒரு கொலை வெறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ரஜினியின் வெறித்தனமான ரசிகர்கள். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் மீது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.
பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி சமூக ஆர்வலர்களால் பொதுமக்களால் விமர்சனத்திற்கு உள்ளாகிறது, இன்றைய தேதிவரை இச்செயலை எதிர்த்து ஒரு கண்டனம், எதிர்ப்பு அறிக்கையோ, விளக்கமோ ரஜினிகாந்த் அவர்கள் கொடுக்கவில்லை. இச்செயலை ஆதரிப்பது போலவே உள்ளார். இது பொதுமக்களுக்கு அச்சத்தையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.
மேலும் மிருகவதையும் அடங்கும், கோயில்களில் ஆடு பலி இடுவதே ஓரமாக ஒதுக்குப்புறமாக செய்யும் நாடு, மேலும் கசாப்பு கடையில் கூட மறைவாகதான் ஆட்டை அறுப்பார்கள், ஆனால் இப்படி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கூடியிருக்கும் இடத்தில் இப்படி ஒரு கொடூரமான செயலை செய்த மேற்படி நபர்களை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இச்செயலை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]