டெல்லி
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செயத பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 150 நாள்கள் திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதவர்ர் பதவியை ராஜிநாமா செய்தார். பிறகு டெல்லி முதவராக அதிஷி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக இருந்த அதிகாரபூர்வ பங்களாவில், “ஆடம்பரமான” பொருட்களுக்கான நிதி ஆதாரம் குறித்து பாஜக கேள்வி எழுப்பி வருகிறது. முதல்வரின் பங்களாவிற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படவில்லை என பொதுப்பணித் துறையின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எப்படி வாங்கப்பட்டது என்று பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, இவை பஞ்சாப் அரசிடமிருந்து வந்ததா? மதுபான ஊழல் அல்லது டெல்லி ஜல் போர்டு ஊழல் மூலம் வந்ததா? என்று டெல்லி வினா எஉப்பி உள்ளார்.
நேற்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவினர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். காவல்துறையினர் இந்த ஆர்ப்பாட்டத்தை கைவிட அறிவுறுத்திய நிலையில், பாஜகவினர் அதை கேட்கவில்லை. என்பதால் காவல்துறையினர் பாஜகவினரை கைது செய்துள்ளனர்