டில்லி

பிரதமர் அலுவலக முதன்மை ஆலோசகரான பி கே சின்ஹா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் அலுவலக முதன்மை ஆலோசகராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா சென்ற மக்களவை தேர்தல் முடிந்த உடன் ராஜினாமா செய்தார்.  அதன் பிறகு  உத்தரப்பிரதேச மாநில 1978 ஆம் வருட ஐ ஏ எஸ்  அதிகாரியான பி கே சின்ஹா கடந்த 2019 ஆம் வருடம் மக்களவை தேர்தலுக்குப் பிறகு பிரதமர் அலுவலக முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

பி கே சின்ஹா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவர். இதற்கு முன்பு அவர் மத்திய அமைச்சரவை செயலர் ஆகவும் அதற்கு முன்பு மத்திய மின்சாரத்துறை அமைச்சக செயலராகவும் பணி புரிந்துள்ளார்.   பிரதமர் அலுவலக முதன்மை செயலர் பதவி என்பது மத்திய அரசின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றாகும்.

இந்நிலையில் பி கே சின்ஹா தனது பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.   அவர் தனது சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  ஆயினும் அவரது திடீர் ராஜினாமாவுக்குப் பின்னால்  வேறு ஏதோ காரணங்கள் உள்ளதாக ஊகங்கள் கிளம்பி உள்ளன.