டில்லி:

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியான நிலையில், நாடே சோகமாக காட்சியளிக்கும் வேளையில், பிரதமர் மோடி, டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் அதிவேக ரெயில் சேவையான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்தார்.

சென்னையில் உள்ள ஐசிஎப் ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட  16 பெட்டிகள் கொண்ட இந்த எஞ்சின் தனியாக இல்லாமல், பயணிகள் பெட்டியுடன் இணைத்து புதுமையான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த  ரயில், டெல்லி வாரணாசி இடையே இயக்கப்படுகிறது.

மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்று பிரதமர் மோடி ரயில் சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இதுவே இந்தியாவின் முதல் அதிவேக ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நிகழ்ச்சியின்போது, ‘புல்வாமா  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்களுக்கு, பிரதமர் மோடி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.