டில்லி

வரும் 20 ஆம் தேதி பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தைக் காஷ்மீரில் இருந்து தொடங்க உள்ளார்.

 

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மத்தியில் ஆளும் பாஜாக ஆட்சியைத் தக்க வைத்து கொள்ளத் தீவிரமாகத் தயாராகி வருகிறது.  இதைப் போல் எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்த தயாராகி வருகின்றன.

வரும் 20 ஆம் தேதி தேர்தலுக்கான பிரசாரத்தைப் பிரதமர் மோடி காஷ்மீரில் இருந்து தொடங்க உள்ளார். இதற்காக ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் விளையாட்டு மைதானத்தில்  பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மாநிலத்தில் ஏராளமான வளர்ச்சித்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

பாஜக வட்டாரங்கள் பிரதமர் மோடியின் காஷ்மீர் வருகையால் அங்கு பாஜகவின் பலம் அதிகரிக்கும் எனத் தெரிவித்து உள்ளன. காஷ்மீரில் பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.