டெல்லி: பிரதமர் மோடி இன்று ஏராளமான ரயில்வே திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 168 ரெயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

PM Modi inaugurated, 168 railway station stalls, sell local products, railway station stalls,

பிரதமர் மோடி, இன்று காணொளி காட்சி மூலம் நாடு முழுவதும் ரூ.85,000 கோடிக்கு அதிகமான ரயில்வே திட்டங்களை  தொடக்கி வைத்தார். அதன்படி, சென்னை மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையும் தொடங்கப்பட்டது. இதுதவிர,  பேசின்பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிட் லைனை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், சிங்கப்பெருமாள் கோவில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வள்ளியூா் ஆகிய 6 ஊா்களில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மலிவுவிலை மருந்தகங்களையும், 168 ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ (விற்பனை) அரங்குகளையும் பிரதமர் திறந்து வைத்தார்.

இதன்மூலம், தமிழ்நாட்டில்  இன்றுமுதல் ல் 168 ரெயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.  ஏற்கனவே இந்த திட்டம், சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில்  நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது மேலும் 168 ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் 168 ரெயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ விற்பனை அரங்குகள் திறக்கப்பட்டன. உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களில் முக்கிய விளைபொருட்களை ரெயில் பயணிகளுக்கு தரமாகவும் குறைவான விலையில் கிடைக்கும் வகையிலும் இந்த கடைகள் செயல்படும். சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ரெயில் நிலையங்களில் அந்த பகுதியில் உள்ள முக்கியமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.  இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் பல ரெயில் நிலையங்களில் ஒரு பொருள் அங்காடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை – மைசூரு உள்பட 10 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!