சண்டிகர்:  ஹரியானா மாநிலத்தில் 48 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

90 தொகுதிகளைக்கொண்ட ஹரியானாவில்  சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள்  நேற்று (அக்டோபர் 8ந்தேதி)  காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. வாக்கு எண்ணிக்கையின்போது,   தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், பின்னர் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  மதியம் 1.30 மணி நிலவரப்படி, ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும் பா.ஜ.க. 48 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வந்தது. பின்னர் நேரம் ஆக ஆக பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்தது.

இறுதியில்,  பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றது.  காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும்,  இ  சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் பாஜக 3வதுமுறையாக மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

இதையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை வழங்கிய அரியானா மக்களுக்கு எனது வணக்கம். இது அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி அரசியலுக்குக் கிடைத்த வெற்றி ஆகும். இங்குள்ள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்