மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டில் கொரோனா தொற்றால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,840 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால், கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிலிப்பைன்ஸ் அறியப்பட்டது.
பின்னர் கடுமையான ஊரடங்கின் பலனாக, பிலிப்பைன்சில் தற்போது 2,000க்கும் குறைவான கொரோனா நோயாளிகள் உள்ளனர். இந் நிலையில் அங்கு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதாக, அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அறிவித்துள்ளார். இதையடுத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பிலிப்பைன்ஸ் கல்வித்துறைச் செயலாளர் லியோனர் பிரியோன்ஸ் கூறி இருப்பதாவது: பிலிப்பைன்சில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனாவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று கூறி உள்ளார்.