சென்னை

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்துள்ளன.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களால் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றப்படுகிறது.   கடந்த சில நாட்களாக கடுமையாக விலை ஏற்றம் காணப்படுகிறது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.  பெட்ரோல் இன்று ஒரு லிட்டர் ரூ.92.59க்கு விற்பனை செய்யப்படுகிறது.   இதைப் போல் டீசல் லிட்டருக்கு 35 காசுகள் விலை உயர்த்தப்பட்டு இன்று ஒரு லிட்டர் ரூ.85.98க்கு விற்பனை ஆகிறது.

தவிர போக்குவரத்து செலவு காரணமாகத் தமிழகத்தில் மாவட்டத்துக்கு மாவட்டம் விலை மாறுதல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.  தமிழகத்தில் கடலூரில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ..94.31 மற்றும் டிசல் ஒரு லிட்டர் ரூ.97.66 என விற்பனை செய்யப்படுகிறது.