நெட்டிசன்:

ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சின்னசாமி பத்ரசாமி (Chinnasamy Badrasamy) அவர்களின் முகநூல் பதிவு:

“ஓய்வுபெற்ற அரசு ஊழியன் என்ற முறையில்……
1980 ல் பயிற்சிக்கு போகும்போது 300₹ மாதாந்திர பயிற்சி சம்பளம். கட்டுப்படியாகவில்லை!!
சில காய்கறிகள் பிடிக்காது. ஆனால் வேறு வழி இல்லாமல் தட்டில் விழுந்ததெல்லாம் சாப்பிட பழகினேன். வெளியில் சாப்பிட பணம் வேண்டுமே!

பின் பயிற்சி முடிந்து பணியில் சேரும்போது 900₹ தான் வாங்கினேன். அது எனக்கு பெரிய தொகையாகத்தான் தெரிந்தது திருமணம் ஆகும் வரை.
திருமணம் 1982 ல் நடந்துச்சு.

சின்னசாமி பத்ரசாமி 

அதன் பின் நான் ரேஞ்சராக இருந்த வரை என் சம்பளம் வரவுக்கும் செலவுக்கும் சரியாகத்தான் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் பற்றாக்குறை தான்.
வீரப்பன் ஆபரேசனில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயும் கடன் அடைக்கவே சரியாக இருந்தது.
(இந்த பற்றாக்குறையிலும் எனக்கும் தெரியாமல் சீட்டுநாட்டு போட்டு இரண்டு இடங்களில் இடம் வாங்கிய என் மனைவியை பாராட்ட வேண்டும். எனக்கு தெரிந்திருந்தால் அதையும் பிடுங்கி டிபார்ட்மெண்ட்க்கு செலவழித்திருப்பேன். அந்த இடம் இல்லையென்றால் இப்போது குடியிருக்கும் வீட்டை கட்டி இருக்க முடியாது!)

இந்த பே கமிஷனுக்கு முந்தைய பே கமிஷன் வந்ததில் ஓரளவு சம்பள உயர்வு கிடைத்தது. பதவி உயர்வில் இன்னும் கொஞ்சம் சம்பளம் கூடியது. 2016 ல் ஓய்வு பெறும்போது என் சம்பளம் எனக்கு திருப்தியாகத்தான் இருந்தது.
Take home salary கிட்டத்தட்ட ₹75000/-
( இதற்கு 36 வருடங்கள் சர்வீஸ் போட வேண்டியதாகி விட்டது. இப்போது சேரும்போதே இந்த சம்பளத்தில் சேர்கிறார்கள்.
அது அவர்கள் வாங்கிய வரம்!!)

முகநூல் பதிவு

இப்போ எதுக்குயா இந்த டீட்டெயிலுன்னு உங்க மைண்ட் வாய்ஸ் ஐ ஆம் ஹியரிங்!!

இப்போது அரசு ஊழியர் போராட்டம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி!!

ஓய்வூதியம், சம்பள முரண் களைதல் போன்றவை சரிதான்.
ஆனால் அதிக சம்பளம் கோருதலில் எனக்கு உடன்பாடில்லை!
எளிய அதேசமயம் கவுரவமான வாழ்க்கைக்கு இப்போதைய சம்பளம் போதுமானதே!

ஆடம்பர வாழ்க்கைக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாதுதான்!!

this post will definitely hurt government servants!!
I am sorry!!

டிஸ்கி:
அரசு பக்கத்திலும் நிறைய ஓர வஞ்சனைகள், நயவஞ்சகம் எல்லாம் உண்டு!
சம்பள கமிஷனை தாமதித்து விட்டு 2016 ல் இருந்து தரவேண்டிய தொகையை அரசே சாப்பிட்டது. அதற்கு ஓர் உதாரணம்.”