ஜம்புலிங்கேஸ்வரர் கோயில், பட்டடக்கல்
ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் பட்டடக்கல் பகுதியில் ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாகும். இக்கோயிலில் நுழையும் பக்தர்கள் பார்வதி தேவி, சிவபெருமான மற்றும் நந்தி சிலைகளை காணலாம்.
இந்த கோயிலின் நகல் வடிவமான கடசித்தேஸ்வரர் கோயிலைப் போன்றே இதுவும் ஒரு ஐந்து அடுக்குகளைக் கொண்ட உயரமான பீட அமைப்பின்மீது கட்டப்பட்டுள்ளது. மேல் அடுக்கில் கணங்கள்(குள்ள மனித உருவங்கள்), பறவைகள் மற்றும் குடு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நந்திமண்டபத்தின் அடித்தளப்பகுதி மற்றும் நந்தி சிலையை கோயிலின் கிழக்கு பகுதியில் காணலாம். கருவறைச்சுவர்கள் அலங்கார மாடங்களுடனும் அவற்றுள் விஷ்ணு (வடக்கு), சூர்யா (மேற்கு) மற்றும் சிவன் (தெற்கு) சிற்பங்களுடனும் காட்சியளிக்கின்றன.
கர்ப்பகிருகத்தின் மேற்கூரை மற்றும் மண்டப மேற்கூரைகள் மகரா மற்றும் வியாலா சிற்ப வேலைப்பாடுகளை கொண்டுள்ளன. மேலும் மண்டப வாயிற்பகுதி கதவு அலங்காரப் பட்டைகளையும் கொண்டுள்ளது. பட்டடக்கல் பகுதிக்கு வருகை தரும் எல்லா பயணிகளும் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய அம்சங்களுள் இந்த ஜம்புலிங்கேஷ்வரர் கோயிலும் ஒன்றாகும்.