மேஷம்

பேச்சில் அபார புத்திசாலித்தனம் வெளிப்பட்டு உங்களை ‘ஷைன்’  பண்ணச் செய்யும். கவர்ச்சியும்  பூசியிருப்பதால் நாலு பேர் ஓடி வந்து உங்க அபிப்ராயத்தைக் கேட்டு அதன்படி நடப்பாங்க. சுருங்கச் சொன்னால் இதன் பெயர்தாங்க செல்வாக்கு. ஆபரேஷன் செய்தால்தான் குணமாகும் என்று நேற்றுவரை பயந்தீர்களே. டாக்டர் உங்களைக் கூப்பிட்டு கத்தியின்றி ரத்தமின்றி மருந்து மாத்திரையில் எளிதாய் குணப்படுத்தறேன்னு சொல்லிட்டாரு பார்த்தீங்களா? சகோதர சகோதரிகள் ஃபேமஸ் ஆவாங்க., முதல் வரிசையில் அமர்ந்து கை தட்டும் உங்களை அவங்க பெருமிதத்துடன் பார்ப்பார்கள்.

ரிஷபம்

குடும்பத்தில் லவ் நிலவும். குழந்தைங்க பெரிய அளவில் பெருமிதப்படுத்துவாங்க. நாலு இடங்களுக்கு அவங்களைக் கூட்டிக்கிட்டுப்போய் நீங்க அவங்களை சந்தோஷப்படுத்துவீங்க. அலுவலகத்தில் கூடுமானவரை அட்ஜஸ்ட் செய்துக்கிட்டுப் போறீங்க. வெரிகுட். இன்னும் கொஞ்சமே கொஞ்ச காலம் இப்படியே கழித்தால் போதுமுங்க. அப்புறம் நீங்கதான் ராஜா/ ராணி. கால் வலி, கை வலி என்று சின்னச்சின்னதாய் டென்ஷன்கள் இருந்தாலும் எல்லாமே கடந்து செல்லும் மேகம் மாதிரி ஒடியே போயிடுங்க.

சந்திராஷ்டமம் : 31.05.2018 முதல் 02.06.2018 வரை

மிதுனம்

இத்தனை காலம் உறுதியாகமல் இருந்த காதலுக்குப் பச்சைக்கொடி பச்சை விளக்கு எல்லாம் ஜகஜோதியா இருக்கும். திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வந்தால் கொஞ்சம் அவசரப்படாமல் இருங்க. இப்போதைக்கு ஆகாதது நல்லதுதான். தயவு செய்து ஆரோக்யம் பற்றி மிக மிக மிக கவனமாயிருங்க. ப்ளீஸ். திடீரென்று வருமானம் உயரும். அம்மாவுக்கும் அம்மாவாலும் நன்மைகள் உண்டு. மாணவர்கள் ஜமாய்ப்பீர்கள்.  புது வாகனம் வாங்கச்சிறு தடைகள் இருந்தாலும் வாங்கிடுவீங்க. வீடும் வாகனமும் மனசுக்குப் பிடிச்ச வகையில் அமையும்.

சந்திராஷ்டமம் : 02.06.2018 முதல் 04.06.2018 வரை.

கடகம்

இத்தனை நாட்கள் இருந்து வந்த கவலைகளும் டென்ஷன்களும் ஒரு முடிவுக்கு வரும். குறிப்பாய் அரசாங்க சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்  உங்களுக்குச் சாதகமாக முடியும். மகிழ்ச்சியாக நிறைவுபெறும்., பாஸ்போர்ட் விசா நல்லபடியாகக் கிடைக்கும். யாரிடமும் வலுச்சண்டை, வம்புச்சண்டை என்று எதுவுமே வேண்டாம். எது நடந்தாலும் கடகடன்னு கடந்து போகக் கற்றுக்கொள்ளுங்கள். சம்பள உயர்வு தன்னிச்சையாய்க் கிடைக்கும். பதவி உயர்வுக்குக் கொஞ்சமே கொஞ்சம் காத்திருங்க போதும். சும்மா ஆடைக்கும், ஆபரணத்துக்கும், ஆடம்பர சாப்பாட்டுக்கும் கார்டைத் தேய்ச்சுக் கரன்ஸியைப் பறக்கவிடுவீங்க. மன மகிழ்ச்சி உத்தரவாதம்.

சந்திராஷ்டமம் : 04.06.2018 முதல் 07.06.2018 வரை

 சிம்மம்

அப்பாவுக்கு நன்மைகள் உத்தரவாதமாய்க் கிடைக்கும். திடீர் அதிருஷ்டம் என்றால் என்னவென்றே மறந்து போயிருந்த உங்களுக்கு செம லக்தான் போங்க. வெளிநாடு சம்பந்தமான செலவுகள் இருக்கும். அவற்றால் மகிழ்ச்சியும் நன்மையும் கிடைக்கும். கலைத்துறையில் இருக்கீங்களா. குட். அப்படின்னா உங்களுக்கு நிறைய லாபங்கள் மட்டுமில்லீங்க.. புகழும் அதிகரிக்கும். தினமும் இன்பாக்ஸை ஓபன் பண்ணிப் பாருங்க. திடீர்னு அதில் ஒரு நல்ல செய்தி வந்து உட்கார்ந்திருக்கும் பாருங்களேன். அலுவலகத்தில் உங்களை அழைத்து நல்லதொரு வாய்ப்பைத் தங்கத் தட்டில் வைத்துக்குடுக்கப்போறாங்க.

கன்னி

குழந்தைங்க வெளிநாடு போய்ப் படிக்கப்போறாங்க. அவங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க நீங்க ஓடி ஓடி ஷாப்பிங்க செய்வீங்க. பணம் தானா வரும். பயமோ கவலையோ வேண்டாங்க. அம்மாவைக் கொஞ்சம் கவனமாய்ப் பார்த்துக்குங்க. சின்ன பிரச்சினை வந்து சரியாகும். வாகனம் சற்று சிரமம் கொடுக்கும். செலவுக்குத் தயாரா இருங்க. ஸ்டூடன்ட்ஸ் ரொம்பவும் கவனத்துடன் இருக்கணும். வெளி நாட்டு வருமானம் தடையில்லாம வரும். கணக்கு வழக்கு விஷயத்தில் கவனமா இருங்க. அநாவசியப் பேச்சு வேண்டாம். முக்கியமா வாக்குவாதமோ போட்டுக்கொடுத்தலோ கட்டாயமா வேண்டாம்.

துலாம்

திருமணம் பற்றி இருந்து  வந்த டென்ஷன்களும் கவலைகளும் தடைகளும் நீங்கும். மம்மியின் ஆரோக்யம் பற்றி சிறு கவலைகள் இருந்து வந்தாலும் அவை உடனே சரியாகி வயிற்றில் ஜில் பால் வார்க்கும். ஆரோக்யம் பற்றிக் கடந்த காலத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகி நிம்மதி அளிக்கும். வெளிநாட்டில் புது வேலை கிடைக்கும். தந்தைக்குப் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேடை ஏறிக் கைதட்டலோ அல்லது பரிசோ அல்லது இரண்டுமோ வாங்குவார்.

விருச்சிகம்

சிறுநீரகம் அல்லது கர்பப் பை சம்பந்தமான பிரச்சினைகள் வந்தால் பயந்து அலறாதீங்க. கவனமான சிகிச்சையினால் பெரிய ஆபத்தோ, அல்லது அறுவை சிகிச்சையோ இல்லாமலேயே சரியாகும். தந்தையுடன் சற்று சமாதானப் போங்களேன். குறைஞ்சா போயிடுவீங்க. பாவம் அவர். பாசத்தில் தவிக்கிறார். பெரிய செலவு என்று நீங்க பயந்த விஷயங்கள் சுமாரான செலவுடன் முடியும் என்பது  உங்கள் மனசுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் தரும். சகோதர சகோதரிகளுடன் வாய்ச்சண்டை, கைச்சண்டை, வாள் சண்டை எதுவுமே வேண்டாங்க. சைலன்ட்டா போங்க. எல்லாம் தானா சரியாகும்.

தனுசு

காதலில் வீழ்வதற்கான சாத்தியம் அதிகம் உண்டு.  கணவரின் / மனைவியின் புத்திசாலித்தனமான தீர்மானத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தயவு செய்து பேசிப் பேசி வாதிட்டு யாரையும் வெல்லலாம் என்று கனவில்கூட நினைக்க வேண்டாம். மிகவும் மினிமம் பேச்சு ரொம்பவே நல்லது. ஆமாம். சொல்லிட்டேன். பிறகு மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டாம். உறவினர் தகராறுகளில் தலையிட்டுக் கொள்ளாமல் நீங்க உண்டு உங்க வேலை உண்டு என்று போங்க. பஞ்சாயத்து செய்ய முயற்சி செய்யாதீங்க. பிறகு அவங்க ஒண்ணாய்ச் சேர்ந்து உங்களை விட்டுடுவாங்க. பரவாயில்லையா?

மகரம்

கோபம் உச்சி மண்டைக்கு ஏறாமல் பார்த்துக்குங்க. வார்த்தைகள் வலுக்காமல் மென்மையாய்த் தழைந்து போய் இதமாய்ப் பேசி எதையும் முடிக்கப்பாருங்க. வெளிநாடு செல்லும்போது பொருட்களையும் பணத்தையும் பத்திரமாய் வெச்சுக்குங்க. அப்பாவின் நன்மைக்காக நீங்க செய்த முயற்சிகள் எல்லாம் நல்லபடியாய்ப் பலன் அளிக்கும். குழந்தைகளுக்குப் பெரிய நன்மைகள் காத்திருக்கின்றன. அவங்க பாராட்டும் பரிசும் வாங்குவது மட்டுமில்லாமல் அரசாங்கத்திடமிருந்து நன்மையும் காத்திருக்கு அவங்களுக்கு. தைரியமும் துணிச்சலும் இருப்பதுடன் தன்னம்பிக்கையும் அதிகரிக்குங்க.

கும்பம்

செலவுகள் டக் டக்கென்று கட்டுப்படும். வருமானம் உயர்வதற்கு  இன்னும் கொஞ்ச காலம் காத்திருங்க. எதிர்பாலின நண்பர்கள் நன்மை செய்வாங்க. வயிறு சம்பந்தமான சின்ன உபாதைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உணவு விஷயத்தில் மிகவும் கவனமா இருங்க. தாயாருக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். அவங்களுக்கும் மகிழ்ச்சி.. அவங்களால உங்களுக்கும் மகிழ்ச்சி.. வாகனம் வாங்கப்போறீங்க. மாணவர்கள் நல்லா ஷைன் பண்ணுவீங்க. குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமிதமும் அதிகரிக்கும். வருமானம் தாமதமானாலும் வரும்.

மீனம்

குடும்பத்தில் குட் நியூஸ் உண்டு. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றி பயமே வேண்டாம். சரியாகும் என்பதோடு செலவும் வைக்காது. சகோதர சகோதரிகள் மூலம் நன்மையும் லாபமும்  கிடைக்கும். மன அமைதியும்கூடக் கிடைக்கும். நிலங்களால் வருமானம் அதிகரிக்கும். லாபம் கூடும். வாகனம் மிகவும் பொலிவாகவும் அழகாகவும் அமையும். வாகனங்களால் இத்தனை காலம் ஏற்பட்ட செலவுகள் குறையும். நல்ல நல்ல செலவுகள் செய்வீங்க. அல்லது முதலீடுகள் அதிகமாகும். குழந்தைங்க வீடு வாங்குவாங்க. குட் லக்.