வார ராசிபலன் : 11.12.2020 முதல் 17.12.2020 வரை
வேதா கோபாலன்
மேஷம்
கொள்கைகளை சற்று மாற்றிக் கொள்ள வேண்டிவரும். அவசியம் காரணமாக உங்களுக்குப் பிடிக்காத சிலருடன் கைகோத்து பணியாற்ற வேண்டி வரக்கூடும். அதை மன நிறைவுடன் செய்வீங்க. புதிய ஐடியாக்கள் மனதில் தோன்றுவதால் ஆக்கப்பூர்வமான செயல்கள் நிகழும். எப்போதோ நீங்கள் கொடுத்துவிட்டு மறந்துபோன தொகைகள் இப்போது திரும்ப வரும். பலநாள் இழந்திருந்த மகிழ்ச்சி குடும்பத்தில் மீண்டும் தோன்றி குதூகலிக்க வைக்கும். வாழ்க்கை முறைகள் மாறுங்க. உங்களின் உண்மைத் தன்மை உங்களைக் காக்கும். சிறிதளவு பணவரவு உண்டு.உத்தியோகத்தில் தாமதமான விஷயங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். கட்டிடப் பணியைத் தொடரும் எண்ணம் உருவாகும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடிவடையும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேணும். பெண்கள் விருந்து விசேஷங்களுக்கு செல்வீங்க. அலுவலகத்தில் சஞ்சலம், குழப்பத்தால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாறுவீங்க. வியாபாரிகள் பிரயாணங்களை தவிர்க்கணுங்க. வாகன மாற்றம் இருக்குங்க.
சந்திராஷ்டமம் டிசம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை
ரிஷபம்
விவசாயம் போன்ற விஷயங்கள் செய்ய விருப்பம் கூடும். நீங்கள் பேசுவதெல்லாம் பலிக்கும் என்பதால் கவனமாய்ப் பேசுங்கள். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும். தடைப்பட்டு வந்த நேர்த்திக் கடன்களைச் செய்துமுடித்து மன நிறைவு பெறுவீங்க. சகோதர சகோதரிகளுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றுவீங்க. மனிதத் தன்மைமை இழக்க சந்தர்பங்கள் வந்தும் நேர்மையுடன் இருப்பீங்க. புதிய வேலையில் சேருவதற்கான கால நேரம் வந்துவிட்டது. முந்தைய தலைமுறையினருடன் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். உணர்ச்சிப் பூர்வமாகச் செயல்படுவீங்க. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடு காரணமாக கலகலப்பான சூழல் உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் நட்பால் உற்சாகமடைவீங்க. வியாபாரத்தில் எதிர்பாராத்த வகையில் பணம் வரும். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீங்க.
சந்திராஷ்டமம் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 17 வரை
மிதுனம்
திருமணமான பெண்களுக்குத் தாய் வீட்டிலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி வகையில் செலவுகள் உண்டாகும். புது லேப்டாப் வாங்குவீங்க. எதிர்பார்த்த பணம் திங்கட்கிழமை கைக்கு வரும். வார மத்தியில் சில சின்ன ஏமாற்றங்கள் வந்தாலும் வார இறுதியில் மகிழ்ச்சியுடன் நிமிர்வீங்க. யாரிடம் எப்படிப் பேச வேணும் என்று நன்கு அறிந்து நடந்து கொள்வீங்க. தேவையற்ற சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம். நீங்கள் பெருந்தன்மையானவர் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைப் புரிந்துக் கொள்ள நண்பர்கள் உதவுவாங்க. உத்தியோகத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்குங்க. பெண்களுக்கு அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். மாணவர்களின் முயற்சிகள் சாதனையாக உருவெடுக்கும்.
கடகம்
குடும்பத்தில் சிலரின் உயர்வுகளைப் புரிந்து கொண்டு மனம் மாறுவீங்க. அலுவலக விவகாரங்களில் மனதில் தெளிவு வரும். புகழ் அளிக்கக்கூடிய துறைகளில் ஈடுபடுவீங்க. புதிய வேலைக்காகவும், இருக்கும் வேலையில் உயர்வதற்காகவும் சற்று அதிகமாகத் திறமைகளை வளர்த்துக்கொள்வீங்க. பல காலமாகத் தன்னம்பிக்கை இழந்திருந்த நிலையில் ஒருவர் அதை மாற்றுவார். வயதை மீறிய பக்குவமும் அனுபவமும் உங்களுக்கு மேலும் அதிக வெற்றியைத் தரும். அமைதியான முறையில் சில சாதனைகள் செய்வீங்க. மாணவர்கள் சிரமமான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீங்க. அலுவலகத்தில் உங்களின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம். வாகனத்தை சீர் செய்வீங்க. வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீங்க.
சிம்மம்
வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு இயல்பாக முன்னேறுவீங்க. உங்களின் இயல்புத் தன்மையிலிருந்து மாறாமல் வெற்றி இலக்கை நோக்கிச் செல்வீங்க. புதிய நண்பர்களிடம் மனம்விட்டுப் பேச வேண்டாம். உங்களிடம் உள்ள தனித்தன்மை வெளிப்படும். ஆரோக்யமான போட்டியில் ஈடுபடுவீங்க. இளைஞர்கள் இழந்திருந்த தன்னம்பிக்கையை மீட்டுக் கொள்வர். கடுமையாகப் பேசியவர்கள் இனிமையாகப் பேச ஆரம்பிப்பாங்க. விளைவு எது வந்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலுடன் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவீங்க. மனதில் உற்சாகம் உயர்வதால் இது ஜாலியான வாரமாக அமையும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடிவரும். பெண்களுக்கு எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். வியாபாரிகள் கோபத்தை அடக்கிக்கொண்டு பரிவர்த்தனையில் வெற்றியடைவீங்க. நண்பர்களுக்கு உங்களால் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு வெற்றி பெறக்கூடிய நாள்
கன்னி
துணிச்சலும் தன்னம்பிக்கையும் உங்களை வழிநடத்தி முன்னேற வழிவகை செய்யும். எதிர்பாலினத்தினரிடமிருந்து சற்றும் எதிர்பாராத பரிசு ஒன்று கிடைக்கும். நேர்மை. நேரம் தவறாமையும் நேரமும் முக்கியம் என்பதை உணர்வீங்க. பெரிய வாய்ப்பு ஒன்று தேடி வந்து உங்களை உயர்த்தும். சாதக, பாதகமான பலன்கள் கலந்து கிடைக்கக்கூடிய நேரம். எதிலும் நிதானமும், பொறுமையும் அவசியம். நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் வந்தாலும்கூட உங்கள் நட்புணர்வால் அதைச் சரிசெய்வீங்க. விரும்பியது கிடைக்கும். வியாபாரிகள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவீங்க. வீடு மாற முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவீங்க. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
துலாம்
கவலைகள் தீரும். பணியிடத்தில் உங்கள் நேர்மையையும் உழைப்பையும் நிறைவேற்றுவீங்க. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சற்றும் எதிர்பாராத வாய்ப்பு பெரிய இடத்திலிருந்து வரும். குடும்பத்தில் சந்தோஷத்தைப் பெறப்போகிறீர்கள். பெற்றவர்களைப் பெருமிதப்படச் செய்யும்படியான செயல் ஒன்றைச் செய்யப்போகிறீர்கள். பலருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவராவீங்க. உச்சிக்குப் போகக்கூடிய மிகக் கடினமான பாதையில் நடந்து வெல்வீங்க. புதிதாக ஒரு கலையைக் கற்றுக்கொள்வீங்க. எதையும் எதிர்த்து நிற்பதைத் தவிர்த்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். பயணங்களால் நன்மை ஏற்படும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவீங்க. நீண்ட நாட்களாக தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருந்த பண வரவு கிடைக்கும். பெண்களுக்குச் சிறு ஏமாற்றங்கள் வருத்தம் தரும்.
விருச்சிகம்
எதிர்பாராமல் மடியில் வந்து விழும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்துவீங்க. செய்யும் பணியில் சில புதுமைகள் புகுத்திப் பலரின் பாராட்டைப் பெறுவீங்க. அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்குங்க. இளைஞர்களுக்குக் காதல் அறிமுகமாகும். வெளிநாட்டில் உள்ள நெருங்கிய உறவினரைச் சந்திக்கும் வாய்ப்பு வரும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும் போதும் கவனமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் இடமாற்றம் உண்டாகலாம். பொதுமக்களை ஈடுபடுத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு லாபம் கூடும். உங்கள் அருமை புரியாதவர்களுக்கு உங்களைப் புரிய வைப்பீங்க. சாதாரணமாகப் பேசும்போது அது சண்டையில் முடியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் வருவதற்குத் தாமதமாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரியின் விமர்சனங்கள் எரிச்சல் ஏற்படுத்தலாம்.
தனுசு
உங்களின் கடுமையான உழைப்பை நிரூபிக்கும் சாதனை நிகழும். குடும்பத்தினரைச் சிறிதுகாலம் பிரிந்திருக்கும்படியான பயணம் ஒன்றைத் துவங்க நேரிடும். மன நிறைவு காண்பீங்க. குடும்பத்தில் ஒருவரை நினைத்துப் பெருமிதப்படும்படியான சம்பவம் நிகழும். போட்டிகளைச் சுலபமாகச் சமாளிப்பீங்க. ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகப் பேசுங்கள். பல காலம் தள்ளிப் போட்ட விஷயங்களை விரைந்து முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். சாதாரணமாகச் செய்யும் விஷயங்கள் வீண் பழி தரக்கூடும். நெருங்கியவர்களிடம் மனக்குறைகளை சொல்ல வேண்டாம். . உத்யோகத்தில் மிகுந்த கவனமாக இருப்பீங்க. வியாபாரிகள் தவறுகளைத் திருத்திக்கொள்வீங்க. மனதுக்கினிய அன்பர்களுக்கு உதவி செய்வீங்க. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வெற்றியும் விருதும் கிடைக்கும்.
மகரம்
அலைச்சலுக்குப் பிறகு கடினமான விஷயங்கள்கூட கூட கைகூடும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் நிதானமாகப் பேசுவதற்கான பக்குவம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பொழுது போக்கு அம்சங்கள் காரணமாகப் பொறுப்புகளைப புறக்கணிக்க வேண்டாம். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். குடும்பத்தின் பிரதிநிதியாக சில விஷயங்கள் செய்வீங்க. சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் குலைந்திருந்த சந்தோஷமும் நிம்மதியும் மறுபடியும் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொறாமைகளால் அவதூறுகளைச் சந்திக்க வேண்டி வரும். மிகவும் உழைப்பதால் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வெற்றி தரக்கூடிய நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு இல்லை. வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சலசலப்புகள் வரும்.
கும்பம்
வழக்கு விவகாரங்களைத் தள்ளிப் போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீங்க. பேச்சிலும் செயலிலும் நிதானம் கட்டாயம் தேவை. நிதானமாகப் பேசி மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வது வெற்றிக்கு உதவும். பிரபல நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். கடமைகளில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த வாரம் அமையும். திட்டமிட்டபடிபடியே விஷயங்களைச் சாதித்துக் கொள்வீங்க. நேர்வழியும் ஜாக்கிரதையான பேச்சும் இல்லாவிடில் சிரமம் ஏற்படும். உங்கள் கடின உழைப்பை நிர்வாகம் அங்கீகரிக்கும். பலருக்குக் குழந்தைகளின் செயல்பாடுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். மகன் அல்லது மகளுக்குக் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறுங்க.
மீனம்
மனதில் உற்சாகம் பிறக்கும். மிகக் கடினமான விஷயங்களை முனைந்து முடித்து வெற்றியை எட்டுவீங்க. அரசியல்வாதிகளுக்கு எடுத்த விஷயங்களில் உடனே வெற்றி ஏற்படும். பணியாளர்களின் முயற்சியில் தாமதமாக வெற்றி ஏற்படும். சில விழாக்களில் பங்கேற்கும்போது மனதுக்குச் சங்கடம் ஏற்படுத்தும் உரையாடல்கள் நிகழும். எதிர்பாராத விஷயம் ஒன்று நடைபெறும். விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் உங்களின் பணியிலும் தொழியிலும் முன்னேறி வெல்வீங்க. புதிய துறை ஒன்றில் ஈடுபடும் ஆர்வம் ஏற்படும். அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை. தன வரவு திருப்தியளிக்கும். பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடுகள் குறையும். அலுவலகத்திலிருந்து சந்தோஷமான செய்திகள் வரும். கணவன் மனைவியிடையே பரஸ்பர உதவி கிடைக்கும். நண்பர்களிடையே சுமூக நிலை காணப்படும்.
சந்திராஷ்டமம் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 12 வரை