டெல்லி

ரும் 25 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூடத்தொடர் தொடங்க உள்ளது

.

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு எக்ஸ் தளத்தில்,

”மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் வரும் 25-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் நவ.26-ம் தேதி நாடாளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75-ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடபடும்”

எனப் பதிவிட்டுள்ளார்

குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மற்றும் வக்பு (திருத்தம்) மசோதா 2024 ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இவை இரண்டுக்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால், கூட்டத்தொடரில் கடும் அமளி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது,.