டெல்லி: நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது.
நாடாளுமன்றத்தின் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29ம் தேதி தொடங்கியது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் உரையை காங்கிரஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந் நிலையில், 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. 4 மாநில மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்தக் கூட்டம் கூடியது.
எனவே குறிப்பிடத்தக்க தலைவர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 8ம் தேதி கூட்டத்தொடர் நிறைவடைய உள்ள நிலையில், மின்சார சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.