டெல்லி: நாடு முழுவதும் குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இன்றைய நாளில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரும் இன்று தொடங்கு கிறது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே பாராளுமன்றச் செயலகம் அறிவித்திருந்தது. மேலும், இன்று குடியரசு தலைவர் வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. அத்துடன் கூட்டத்தொடரும் இன்று தொடங்குகிகறது.  இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை, பாராளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என உள்பட பல்வேறு விஷங்களால் இந்த கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என தெரிகிறது.