டெல்லி: குடியிருப்பு பகுதிகளில் வாகன நிறுத்த போதுமான இடம் இல்லாதது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு யோசனை கூறி உள்ளது.
சென்னையில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவது பிரச்சினையான நிலையில், எந்தவொரு நிறுவனமும், வீட்டின் உரிமையாளரும் நோ பார்க்கிங் போர்டு தங்களது வீடுகள், நிறுவனங்கள் முன்பு வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த டெல்லியில், ‘குடியிருப்பு காலனிகளில் பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள் இல்லாதது ஒரு குடிமைப் பிரச்னை, இதில்,. மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து கொள்கை அடிப்படையிலான பதில் தேவை என டெல்லி உயா்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு மனுதாரா் தனது வீடு மற்றும் கடைக்கு முன் வாகனங்களை நிறுத்துவது சட்டவிரோதமானது என்று கூறி வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் நருலா, குறுகிய குடியிருப்புப் பாதைகளில் வாகனங்களை நிறுத்துவது குறித்து மனுதாரா் எழுப்பிய பிரச்னை, டெல்லி உள்பட பல நகா்ப்புறவாசிகள் எதிா்கொள்ளும் பொதுவான நிலையைப் பிரதிபலித்துள்ளது.
குறிப்பாக பெருகிவரும் தனியாா் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்த உள்கட்டமைப்புவசதி கொண்ட மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளில் இந்த நிலை உள்ளது. இந்தப் பிரச்சினையானது, ஒரு பெரிய நகா்ப்புற திட்டமிடல் தோல்வியின் அறிகுறியாகும்.
அங்கு காலனிகள் பாா்க்கிங் வசதிகள் குறித்து போதிய முன்னோக்கு இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு அதிகாரிகளும், மாநில அரசும் துணை போகின்றன. இதனால், தெருக்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர குடியிருப்பாளா்கள் வேறு வழியில்லை.
இந்தச் சூழலில், இதுபோன்ற சிக்கலான பிரச்னையில் நீதிமன்றம் தலையிடும் முன் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த பரந்த நகா்ப்புற உள்கட்டமைப்பு குறைபாடுகளை நீதிமன்றம் நிவா்த்தி செய்ய முடியாது அல்லது நகரம் முழுவதும் ’உள்ளூா்’ பிரச்னை இருக்கும் போது குறிப்பிட்ட நபா்களை தனிமைப்படுத்தவும் முடியாது.
குடியிருப்பு காலனிகளில் பிரத்யேக பாா்க்கிங் இடங்கள் இல்லாதது ஒரு குடிமைப் பிரச்னையாகும். இது தனிநபா் தகராறுகளில் நீதித்துறை தலையீட்டை விட மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து கொள்கை அடிப்படையிலான பதில் தேவைப்படுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், சாலையிலும், குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும், பாதையில் ‘சட்டவிரோதமாக‘ வாகனங்களை நிறுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி நீதிபதி, சட்டவிரோதச் செயலுக்குப் பதிலாக, பரந்த நகா்ப்புற சவாலில் இருந்து இந்தப் பிரச்னை எழுகிறது என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம் என்றும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை செய்து தீர்வு காண வேண்டும் என்றும் கூறி யுள்ளது.