ரமல்லா:

மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்களுடனான மோதலில் பாலஸ்தீன தொழிலாளர் அமைச்சர் நஸ்ரி அபு ஜெய்ஷ் மற்றும் பிற ஐந்து எதிர்ப்பாளர்கள் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்குக் கரை நகரமான நாப்லஸின் கிழக்கே உள்ள பீட் தஜன் கிராமத்தில் மார்ச் 12ஆம் தீதி ஏற்பட்ட மோதல்களின் போது, இஸ்ரேலிய படையினரால் சுடப்பட்ட ரப்பர் பூசப்பட்ட உலோகத் தோட்டாவால், அபு ஜெய்ஷின் முதுகில் காயம் ஏற்பட்டதாக மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அதிகாரிகள், ரப்பர் தோட்டாக்களால் காயமடைந்த அமைச்சரும் ஐந்து எதிர்ப்பாளர்களும் நாப்லஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும் கண்ணீர்ப்புகைகளை சுவாசித்த பல ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.

இஸ்ரேலிய குடியேற்றம் மற்றும் நிலங்களை பறிமுதல் செய்வதை எதிர்த்து, பாலஸ்தீனியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடத்தும் பேரணியின் போது கிராமத்தில் மோதல்கள் ஏற்படுத்துவது தொடர்ந்து வருகிறது.