இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2019ம் ஆண்டு புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அண்மையில் 13000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஜம்மு நீதிமன்ற்த்தில் தாக்கல் செய்தது.
இந் நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் அந்நாட்டு அமைச்சர் பவாத் சவுத்ரி பேசினார். அப்போது, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று தெரிவித்தார். தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதில், பாகிஸ்தான் அரசிற்கு பங்கு உள்ளது என்பதை அவர் ஒப்புக் கொண்டார். அமைச்சரின் இக்கருத்து சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.