சென்னை: ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க உரிமை மீட்பு குழுவில் பணியாற்றி வந்த அவரது ஆதரவாளரான  முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  நேற்று (27/02/26) எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்  மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் முதலவர் ஓபிஎஸ், அரசியல் அனாதையாக திரிந்த நிலையில், அவருக்கு திமுக அடைக்கலம் கொடுத்துள்ளது. ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் பலர் திமுக, தவெக, அதிமுக என பல கட்சிகளுக்கு சென்ற நிலையில், நேற்று திமுக தலைவரும்,முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் தனது மகன் மற்றும் மேலும் ஒருவருடன் திமுகவில் அடைக்கலமானார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க உரிமை மீட்பு குழுவில் பணியாற்றி வந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்  நேற்று மாலை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

திருச்சியை சேர்ந்தவர் வெல்லமண்டி நடராஜன். அ.தி.மு.க சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டபோது இவர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறினார். இதனால் அ.தி.மு.க-வில் இருந்து வெல்லமண்டி நடராஜன் நீக்கப்பட்டார். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க உரிமை மீட்பு குழுவில் பணியாற்றி வந்தார்.

இந்த சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க-வில் இணைந்தார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் தி.மு.க-வில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க-வில் சேரும் எண்ணமில்லை என்று வெல்லமண்டி நடராஜன் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெல்லமண்டி நடராஜன் இன்று மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்த வெல்லமண்டி நடராஜன் தன்னை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார்.

[youtube-feed feed=1]