டெல்லி

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை அமல்படுத்த வேண்டும் என்றால் இதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தது.

அதாவது மூன்று சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, ஜம்மு – காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து இருந்தது.

மத்திய அமைச்சரவை ராம்நாத் கோவிந்த் குழு அளித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட  மசோதாவுக்கு, கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது.  இன்று மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை அமைஇசர் அமித்ஷா கூறினார் மேலும். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.