ண்டன்

ங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

File photo

இங்கிலாந்தில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பைக்கான இறுதி பந்தயம் நடைபெற உள்ளது.  இதையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.  இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.   இந்த பரிசோதனையில் ஒரு இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று பகல் மூன்று நாட்கள் பயிற்சி விளையாட்டு துர்காமில் தொடங்க உள்ளது.  அந்த விளையாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் கலந்து கொள்ள மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதுவரை பாதிக்கப்பட்ட வீரர் யார் என்பது அதிகாரப் பூர்வமாக யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

வரும் ஜூலை 20 அன்று நடைபெறும் போட்டிக்குள் மேலும் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அது தெரிய வரலாம் எனக் கூறப்படுகிறது.   இதையொட்டி இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைத்துறை அனைத்து வீரர்களையும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளது.   கடந்த சில நாட்களாக கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் இருந்ததாக கூறப்படுகிறது.