ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சி தலைவரான உமர் அப்துல்லா பதவி ஏற்றார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவ ஏற்றனர். அவர்களுக்கு மாநில துணைநிலை ஆளுநர்  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ந்தேதி   ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப் பட்டது.  இதன் காரணமாக கடந்த  10 ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில்  ஜம்மு-காஷ்மீரில்  சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டடது.  மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு,   3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலை  காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி  ஒரு அணியாகவும், , பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. இதனால் மும்முனை போட்டி நிலவியது.

இந்த தேர்தல் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பெரும்பான்மை பெற்றது. ஆனால், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. பாஜக 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

இதைத்தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதற்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் இன்று முற்பகல் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் உமர் அப்துல்லா மாநில முதல்வராக பதவி ஏற்றார்.  ஏற்கனவே முதலமைச்சராக இருந்த உமர் அப்துல்லா இன்று இரண்டாவது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்றார்.

​​ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC)  நடைபெற்ற பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில், உமர் அப்துல்லாவுக்கு எல்-ஜி மனோஜ் சின்ஹா  பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.  அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.வான மேந்தர் ஜாவேத் அகமது ராணா, ரஃபியாபாத்தில் இருந்து ஜாவித் அகமது தார், டி.ஹெச்.போராவிலிருந்து சகினா இடூ மற்றும் சுரிந்தர் குமார் சவுத்ரி ஆகியோரும் எல்-ஜி சின்ஹாவால் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவையில் சம்ப் சட்டசபை தொகுதியில் இருந்து சுயேச்சை எம்எல்ஏ சதீஷ் சர்மாவுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த  பதவியேற்பு விழாவுக்கு  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக தரப்பில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார்.  சமாஜ்வாதி கட்சி (SP) தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி ராஜா,  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலே – சரத்சந்திர பவார் உள்ளிட்ட இந்தியர்களில் பலர் உள்ளனர்.

இதைத்தொடர் மாநிலத்தில் அமைச்சர்கள் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் குலாம் அகமது மிர் மற்றும் ஜே & கே காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா ஆகியோர் அமைச்சர் பதவிகளைப் பெறுவதில் முன்னணியில் உள்ளனர். இது குறித்து கட்சித் தலைமை பின்னர் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். “ஒருவேளை காங்கிரஸ் அமைச்சர்கள் சில நாட்களுக்குப் பிறகு இடமளிக்கப்படலாம்” என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினர்.

முன்னதாக  அவர்,  தாத்தா ஷேக் முகமது அப்துல்லாவின் சமாதிக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.  அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது,  பிராந்தியத்தின் யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது என்று   கூறினார். “ஜே&கே ஒரு யூனியன் பிரதேசம், அதுவே துரதிர்ஷ்டவசமானது. ஆனால் யூனியன் பிரதேசம் என்ற நமது அந்தஸ்து தற்காலிகமானது என்பதை நான் எப்போதும் நிலைநிறுத்தி வருகிறேன். மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு உறுதிமொழிகள் உள்ளன, ”என்று அப்துல்லா கூறினார்,

இதைத்தொடர்ந்து இன்று பிற்பகலில் (புதன்கிழமை )  ஸ்ரீநகரில் நடைபெறும் நிர்வாகச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

J&K 2018 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாமல் இருந்தது.. NC-காங்கிரஸ் கூட்டணி கடந்த 2009 முதல் 2014 வரை இப்பகுதியை ஆட்சி செய்தது. 2024 தேர்தலில் 90 இடங்களில் 49 இடங்களில் வெற்றி பெற்றது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல் முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் உமர் அப்துல்லா…