ரியோ டி ஜெனிரோ,
ஒலிம்பிக் குத்துச் சண்டை 64 கி., எடைப்பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் மனோஜ் குமார் வெற்றி பெற்று அடுத்தச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் 64 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மனோஜ்குமார், முதல் சுற்றில் லித்வேனியாவின் பெட்ராஸ் காஸை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி 2வது சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இதில் உஸ்பெகிஸ்தான் வீரர் கெய்ப்னாசரவை சந்திக்கிறார்.