குலாம் நபி ஆசாத்

பெங்களூரு:

ர்நாடகத்தில் நாங்கள் அரசு அமைப்போம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

இன்று கர்நாடக சட்டமன்றத்தில் 104 பேரின் ஆதரவு மட்டுமே பெற்றுள்ள எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், எண்கள் பாரதியஜனதா கட்சிக்கு எதிராகவும், எங்களுக்கு சாதகமாகவுமே  உள்ளன. சட்ட மன்ற உறுப்பினர்களும் எங்களுக்கு ஆதரவாகவே  உள்ளனர். எ

மல்லிகார்ஜுன் கார்கே

னவே, கர்நாடகாவில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதுபோல பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மூத்த கர்நாடக காங்கிரஸ் நிர்வாகியுமான மல்லிகார்ஜுன் கார்கே, பாஜவுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையிலான ஆதரவு கிடையாது. இன்று நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெல்வோம் என்றார்.  பா.ஜ.க.தற்போது  தோல்வி அடைந்து வருகிறது என்று கூறினார்.