பன்முன்ஜாம்
வடகொரியா – அமெரிக்கா பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.
வட கொரிய அதிபர் கிம் உடனான சந்திப்பு நடைபெறாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அதன் பிறகு நேற்று மீண்டும் அந்த பேச்சு வார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக டிவிட்டர் செய்தி ஒன்றை ட்ரம்ப் வெளியிட்டார். இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஆகியோர் நேற்று இரு நாடுகளில் எல்லைப்புறத்தில் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினர்.
சந்திப்பு குறித்து தென் கொரிய அதிபர் பத்திரிகையாளர்களிடம், “வட கொரியா அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்திக்க உள்ளனர். பேச்சு வார்த்தைகள் நிச்சயம் நடைபெறும். இதில் அணுஆயுதத்தை வட கொரியா கைவிடுவது பற்றி இருநாடுகளும் பேசி முடிவு செய்யும்.
வட கொரிய அதிபர் அமெரிக்க அதிபரை சந்திக்க ஓப்புக் கொண்டுள்ளார். அமைதிக்கான பாதையில் இந்த இரு நாடுகளின் பேச்சு வார்த்தையை கொண்டு செல்ல தென் கொரியா முயற்சி செய்கிறது. நிச்சயமாக அந்த முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம். ” என தெரிவித்துள்ளார்.