விஜய்தேவரகொண்டா தற்போது தெலுங்கு தவிர தமிழ், இந்தி மொழிகளிலும் பாப்புலர் ஆகியிருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தயாரிக்கப் படுகிறது. அடுத்து புரி ஜெகநாத் இயக்கும் ஃபைட்டர் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை நடிகை சார்மி தயாரிக்கிறார். தெலுங்கு, இந்தி என இருமொழிகளில் இப்படம் உருவாகிறது.


ஊரடங்கிற்கு முன்பு படப்பிடிப்பு மும்பை யில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை புரி ஜெகநாத் மாற்றி எழுதி வருவதாக கூறப்பட்டது. இதையறிந்து படபடப்பானார் சார்மி. இதுகுறித்து அவர் பதில் அளிக்கும்போது, ’ஃபைட்டர் ஸ்கிரிப்ட் பிளாக் பஸ்டர் ஸ்கிரிப்ட் ஆகும். அதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்றார் சார்மி.

[youtube-feed feed=1]