தொற்று பரவிய ஆரம்பத்தில் உலகின் மற்ற நாடுகளில் இருந்ததைப் போலவே, தற்போது மலேசியா, இந்தியாவிலும் புதிய கொரோனா ஸ்ட்ரெயின் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ட்ரெயின் என்பது மியூட்டேசன் காரணமாக ஏற்கனவே இருக்கும் வைரஸின் மாறுப்பட்ட பதிப்பாக புதிதாக உருவாகும் வைரஸ் ஆகும். அது போன்ற ஸ்ட்ரெயின்கள் தொற்று தோன்றிய ஆரம்பம் தொட்டே இருந்து வருகிறது. எனவே அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு, நுண்ணுயிரி அறவியல் துறையின் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு
தனித்துவ கொரோனா வைரஸில் இருந்து மியூட்டேசன் காரணமாக முன்பை விட பத்து மடங்கு தோற்றும் தன்மையுடன் வைரஸின் புதிய பதிப்பு தோன்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அது மலேசியாவில் பரவலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்தியா திரும்பிய உணவக உரிமையாளர் உட்பட சிலருக்கு இந்த விவகராமான வைரஸின் தொற்று கண்டறியப்பட்டது. ஆனாலும், இந்த புதிய வகை கொரோனா (டி 614 ஜி மியூட்டேசன்) குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் நுண்ணுயிரியல் துறை விஞ்ஞானி உப்சனா ராய் இது பற்றி கூறும்போது அந்த வைரஸில் கண்டறியப்பட்ட மியூட்டேசன் மலேசியாவுக்கு புதியது என்றாலும், உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட ஒன்றே, எனவே அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார். இந்த மியூட்டேசன் அமெரிக்க விஞ்ஞானிகள் சிலரால் கவனிக்கப்பட்டு பின்னர் ஆய்வில் கண்டறியப்பட்டது. அதில் வைரஸின் புறத்தில் உள்ள அமினோ அமிலம் அஸ்பார்டிக் ஆசிட் கிளைசினாக மாறியிருந்தது. பின்னர் இந்த புதிய பதிப்பு வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டது. ஆனால் இந்த வகை வைரஸ்கள் ஏப்ரல் மாதத்திலேயே இந்தியாவிலும் கண்டறியப்பட்டது குறிபிடத்தக்கது.
ஜுன் மாத மத்தியில் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் சுமார் 75% மாதிரிகள் இப்புதிய வகை வைரஸ்களையே கொண்டிருந்தன. வைரஸின் ஸ்பைக் புரதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மியூட்டேசன் வைரஸின் தொற்றும் தன்மையை 10 மடங்கு அதிகரித்திருப்பதாக கூறப்பட்டாலும், இந்தியாவில் இந்த வகை வைரஸ் பதிப்பு ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் பெருந்தொற்று துவங்கிய காலத்திலேயே கண்டறியப்பட்டது. இன்றளவும் சுமார் 75 சதவிகித நோயாளிகள் இந்த வைரஸ் தொற்றைக் கொண்டுள்ளனர். எனவே அதுகுறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.
இருந்தாலும் இந்த வைரஸ் வகை அதன் தோற்றும் தன்மை, பரவும் தன்மை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும், அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.