டில்லி

ச்சநீதிமன்ற நீதிபதி  சுரேஷ் குமார் கைட் தான் சிதம்பரம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   சிதம்பரத்தின் உடல்நிலை சரியில்லாததால் அவர் குடும்பத்தினர் அவரை ஜாமீனில் விடுவிக்க முயல்கின்றனர்.   பலமுறை டில்லி உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளிக்காததையொட்டி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் இந்த ஜாமீன் மனுவை நிராகரித்தார்.  அவர் அளித்த தீர்ப்பில் ஏற்கனவே ரோகித் டண்டன் என்னும் வழக்கறிஞருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பில் இருந்த வாசகங்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.   அந்த பழைய தீர்ப்பை சற்றே மாற்றியதால் இந்த தீர்ப்புக்கும் சிதம்பரம் ஜாமீன் மனுவுக்கும் தொடர்பில்லாதது போல் உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இன்று நீதிபதி சுரேஷ்குமார் கைட் ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.  அந்த உத்தரவில், “ப சிதம்பரம் ஜாமீன் மனுவை நிராகரித்த தீர்ப்பில் எவ்வித தவறும் இல்லை.   மேலும் ப சிதம்பரத்தின் வழக்கு  விதி எண் எஸ்362சிஆர்பிசி யின் கீழ் வரவில்லை. எனவே ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாற்றத் தடை ஏதும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.