லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என்ற புதிய விதி நாளை முதல் அமலாகிறது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் நாளை முதல் ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாதவர்களுக்கு பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் வழங்கப்படாது என்ற புதிய விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் லக்னோ பெட்ரோல் பங்க்களில் இன்று அதிகமாக கூட்டம் காணப்பட்டது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த வாரம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. இதேபோல் கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது விதிமுறை அமலுக்கு வருகிறது.
[youtube-feed feed=1]