ஈரோடு : தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உள் விளையாட்டு அரங்கை திறந்து வைத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியளார்களை சந்தித்தார்.
அப்போது, ‘பிளஸ்2 பொதுத்தேர்வு அட்டவணை ஏற்கனவே தயார் நிலையில் வைத்து இருந்தோம். அதைத்தொடர்ந்து, பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து து துறை சார்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே சிபிஎஸ்சி தேர்வு அட்டவனை வெளியிடப்பட்டு உள்ளதால், மாநில அரசுக்கான தேர்வு தேதியை அறிவிப்பதில் காலதாமதம் வேண்டும் என முடிவு செய்து, தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதால், பொதுத்தேர்வு தேதிகளை அறிவிப்பதில் சிக்கல் இருந்து வந்தது. தற்போது, அதில் குழப்பம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, பிளஸ்2 தேர்வு மே 3ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. . இதில் குழப்பம் தேவை இல்லை.
மேலும், தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசு செலுத்துவது குறித்து 23ம் தேதி முதலமைச்சருடன் கலந்து முடிவு எடுக்கப்படும். நூலகங்களில் உள்ள காலி பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.