பிஹார்:
​பிஹார் 2 துணை முதல்வர்கள் தேர்வு செய்வது குறித்து பாஜக யோசித்து வருவதாக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தார்கிஷோர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தார்கிஷோர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவிக்கையில், “பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் என்ற பெரிய பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்படுவேன் என்றார்.

பிஹார் பாஜகவிலிருந்து 2 துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்படுவார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “இதுகுறித்து பாஜக சிந்தித்து வருகிறது. நாங்கள் கட்சியின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவோம். தற்போதைய நிலையில் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்க இயலாது