டெல்லி
மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழுவை மீண்டும் மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ஆயோக்கின் தலைவராக பிரதமர் இருக்கும் நிலையில் துணைத் தலைவர் மற்றும் இதர முழுநேர உறுப்பினர்கள் பதவியில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் புதிய அதிகாரபூர்வ உறுப்பினராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி ஆகிய மத்திய அமைச்சர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கபட்டுள்ளனர்.
மத்திய அமைச்சரவை செயலகத்தின் அறிவிப்பை தொடர்ந்து நிதி ஆயோக்கின் திருத்தப்பட்ட அமைப்புக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிகக்கையில் தெரிவித்துள்ளது.