மதுரை:
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவி நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநர் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழு விசாரணை நடத்தலாம் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் மதுரை பல்கலைக்கழகம், ஆளுநர் மாளிகை தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் தன்னிச்சையாக விசாரணை குழுவை நியமித்து விசாரணை மேற்கொண்டார்.
இதை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தன்னிச்சையாக விசாரணை ஆணையம் அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணை கமிஷன் அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என தீர்ப்பு கூறியது. மேலும், நிர்மலா தேவி விவகாரம் குறித்து சந்தானம் குழு விசாரிக்க தடையில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் குழுவை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்து உள்ளது.