டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்வாங்கிவிட்டு,அதைசெலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி கைது செய்யப்பட்டடுள்ள பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி சார்பாக, அவரது தங்கை  பூர்வி மோடி, வங்கி கணக்கில் இருந்த ரூ.17.25 கோடியை மத்தியஅரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

குஜராஙத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, இந்திய வங்கிகளில்  கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பியோடினாா். அங்கு அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தும் பணிகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரி, மத்திய அரசின் வங்கிக் கணக்குக்கு ரூ.17.25 கோடியை செலுத்தியுள்ளாா்.

நீரவ் மோடியின் சகோதரியான பூா்வி மோடியின் பெயரில் லண்டனில் உள்ள வங்கிக் கணக்கில் நீரவ் மோடி ரூ.17.25 கோடியை செலுத்தியுள்ளது அமலாக்கத் துறைக்குத் தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில், இந்த வங்கி கணக்கு விவகாரம் தனக்கு தெரியாது என்றும்,  நீரவ் மோடிக்கு எதிரான வழக்கில் உரிய ஒத்துழைப்பை வழங்குவதாக பூா்வி மோடி எழுத்துப்பூர்வமாக அமலாக்கத்துறையினர் உறுதி அளித்திருந்தார். அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள தொகையை மத்திய அரசின் வங்கிக் கணக்குக்கு அனுப்புமாறு பூா்வி மோடிக்கு அமலாக்கத் துறையினா் உத்தரவிட்டனா்.

அதன்படி, லண்டன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.17.25 கோடியை பூா்வி மோடி மத்தியஅரசுக்கு  அனுப்பி வைத்தாா். இந்த விவகாரத்தில் பூா்வி மோடி அளித்த ஒத்துழைப்பு காரணமாக அத்தொகையை மீட்க முடிந்ததாக அமலாக்கத் துறையினா் தெரிவித்துள்ளனா்.