அபுஜா: நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வெடித்து சிதறியதில்  94 பேர் உயிரிழந்த நிலையில்,  50 பேர் காயம் அடைந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் சாலையில் எரிபொருள் ஏற்றி கொண்டு சென்றுகொண்டிருந்த டிரக் ஒன்று,  திடீரென  கட்டுப்பாட்டை  இழந்து  சாலையில் கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த எரிபொருள் சாலையில் ஆறு போல் ஓடியது. அதனை அங்கிருந்தவா்கள், அந்த வழியாக சென்றவா்கள் என பலரும் அவற்றை எடுத்து செல்வதற்கு குவிந்தனா்.

அந்த சமயத்தில் திடீரென  டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் டேங்கர் லாரியின் அருகே இருந்தவர்கள் உடல் கருகி பலியாகினா். சம்பவ இடத்திலேயே 94 பேர் உயிரிழந்தனா். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனா்.

இந்த கோர விபத்து நேற்று (அக் 15ந்தேதி) இரவு நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து கூறிய அந்த பகுதி மக்கள்,  எரிபொருள் கொண்டு சென்ற டிரிக்கான,  வடக்கு நகரமான கானோவிற்கு அருகிலுள்ள மஜியா நகரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளானது. அப்போது ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் பலர் எரிந்து கரிக்கட்டையாகினர் என்றும், . காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ரிங்கிம் பொது மருத்துவமனையில்  சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது-

இதுகுறித்து கூறிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் லாவன் ஆடம்  “வெடிப்பு ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் கவிழ்ந்த டேங்கரில் இருந்து எரிபொருளை எடுத்துக் கொண்டிருந்தனர், இது ஒரு பெரிய நரகத்தைத் தூண்டியது, இது 94 பேரை அந்த இடத்திலேயே கொன்றது”  என்று தெரிவித்துள்ளார்.