பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது குறைந்த நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்டார்.

நடிகரும், பாடகருமான நிக் ஜோன்ஸ் “ஸ்பேஸ்மேன்” என்ற பெயரில் தனி இசை ஆல்பம் உருவாக்கியுள்ளார்.

பிரியங்கா சோப்ராவை காதலித்த போது, அவருக்கு ஜோன்ஸ் நிறைய காதல் கடிதங்கள் எழுதி உள்ளார்.

பிரியங்காவும், காதல் ரசம் சொட்ட சொட்ட, பல கடிதங்களை தீட்டியுள்ளார். அந்த கடிதங்களில் இருந்து வரிகளை தேர்வு செய்து , இந்த ஆல்பத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார்.

“லண்டனில் அண்மையில் ஆங்கில படத்தின் படப்பிடிப்பில், பிரியங்கா பிசியாக இருந்தார். அப்போது எனக்கு கிடைத்த நேரத்தை பயன் படுத்தி இந்த இசை ஆல்பத்தை உருவாக்கினேன்” என்கிறார், ஜோன்ஸ்.

“இந்த ஆல்பம் பிரியங்காவுக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே அவருக்கே இதனை சமர்ப்பனம் செய்கிறேன்” என ஜோன்ஸ் உருகுகிறார்.

– பா. பாரதி