நாமக்கல்: நாமக்கல்அருகே உள்ள ஒருகோவிலில் திமுக அமைச்சர் முத்துசாமி உடன் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி தனியாக சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அதிமுகவில் இருந்து பல முன்னாள் அமைச்சர்கள், திமுக உள்பட மாற்று கட்சிகளை நோக்கி செல்லும் நிலையில், கடந்த வாரம், மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையின் நடிகர் விஜயை சந்தித்து, அவரது கட்சியான தவெகவில் இணைந்தார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திமுக அமைச்சர் முத்துசாமியை அதிமுக முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி சந்திதது பேசியிருப்பது அதிமுகவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரசியல் களத்தில் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கொங்கு திருப்பதி கோவில் கடந்த சில ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ‘பக்தர்களின் தரிசனத்திற்கு கோவில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில்அமைச்சர் முத்துசாமி உள்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், குமாரபாளையம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி அதிமுக நிர்வாகிகளுடன் கோவிலுக்கு வந்தார். அப்போது,அங்கு இருந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமி சந்தித்து பேசினார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் கைகொடுத்து நலம் விசாரித்ததுடன், தனியாக சுமார் அரை மணிநேரம் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நீண்டகாலமாக பூட்டி இருந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று திறந்துள்ளது. கோவில் வளாகத்தில் மேலும் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொகுதியின் எம்.எல்.ஏ தங்கமணியுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அரசியல் எதுவும் பேசவில்லை” என்றார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து, இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் அங்கிருந்து வருவார்கள் என்று கூறிய நிலையில், அமைச்சர் முத்துசாமியை முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்து அரைமணி நேரம் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.