மும்பை:
பிஎல் யின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நடைபெற்ற ’மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா’ நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிஇஓ காசி விஸ்வநாதன், அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார். அதேபோன்று அணியின் கேப்டனாகவும் நீடிப்பார் என்றும் தெரிவித்தார்.