புதுடில்லி: அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீரில் சிஏஏ பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிஏஏ வின்” செயல்படுத்துதலில், “என்றால்” மற்றும் “ஆனால்”  என எதுவும் இல்லை. இங்கு நடக்கவிருக்கும் அடுத்த நடவடிக்கை ரோஹிங்கியாக்களின் (நாடுகடத்தல்) தொடர்பாக இருக்கும் “என்று நேற்று ஜம்முவில் நடந்த ஒரு விழாவில், செய்தியாளரிடம் சிங் மேற்கோளிட்டு கூறினார்.

இங்குள்ள பொது நிதி விதிகள் குறித்த மூன்று நாள் பயிற்சித் திட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் அரசாங்க அதிகாரிகளிடத்தில் உரையாற்றிய அமைச்சர், ஜம்முவில் கணிசமான ரோஹிங்கியா மக்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

“அவர்கள் (ரோஹிங்கியாக்கள்) நாடு கடத்தப்படுவதற்கான திட்டம் குறித்து  மத்திய அரசு கவலை கொண்டுள்ளது. பட்டியல்கள் தயாரிக்கப்படும். தேவையான இடங்களில், பயோமெட்ரிக் அடையாள அட்டைகள் வழங்கப்படும். ஏனெனில் சிஏஏ ரோஹிங்கியாக்களுக்கு ஒரு பிடிமானத்தைக் கொடுக்கவில்லை,” என்று சிங் கூறினார்.

ரோஹிங்கியாக்கள் புதிய சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும் “ஆறு (மத) சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றார்.  மேலும் அவர்கள் மூன்று (அண்டை) நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களும் அல்ல”, என்று மேலும் அவர் கூறினார்.

ரோஹிங்கியாக்கள் மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வந்தார்கள். எனவே அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.