இட்லிப், சிரியா
சிரியா நாட்டில் நடந்த அமெரிக்கத் தாக்குதலில் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிரியாவில் அமெரிக்கப்படைகள் ஐஎஸ் தீவிரவாதிகளை ஆடியோடு அழிக்கப் போரிட்டு வருகிறது. அவ்வகையில் சிரியா நாட்டில் உள்ள இட்லிப் நகரில் அமெரிக்கப் படைகள் ரகசிய தாக்குதல் ஒன்றை நடத்தியதான அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அந்த தாக்குதலில் ஐ எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் கொல்லப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை அல்பாக்தாடி கொல்லப்பட்டதாக இது வரை பல முறை தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆயினும் தற்போது வெளியான தகவல் மிகவும் சரியான தகவல் எனவும் அவருடைய மரபணு உள்ளிட்ட சோதனைகளுக்குப் பிறகு இது குறித்த தகவல்கள் வரும் எனவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு சில ஊடகங்கள் இந்த செய்தியை வதந்தி எனக் கூறி மறுத்துள்ளன.
அல் பாக்தாதியைக் கொல்ல அமெரிக்கப்படையினர் சூழ்ந்த போது அவர் தற்கொலை உடையை அணிந்து அதில் உள்ள குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும் வேறு சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
[youtube-feed feed=1]