சென்னை:
தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகி உள்ளது. அதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில், ஏற்கனவே 37 மாவட்டங்கள் உள்ள நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்ட மாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்’ என்று கடந்த மார்ச் மாதம் 7ந்தேதி நாகை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவின்போது முதல்வர் எடப்பாடி அறிவித்தார். பின்னர் மார்ச்.24-ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அதை உறுதி செய்தார்.
அதையடுத்து, தனி மாவட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன. மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறும் வகையில் மாவட்டம் பிரிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தமிழகஅரசு, மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குவதற்கான அரசாணையை வெளியிட்டு உள்ளது.