ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.
2019ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் விளையாடிய இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் பங்கேற்ற இந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை ஆரம்பம் முதலே கதறவிட்டது நியூஸிலாந்து.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய நியூஸிலாந்து பௌலர்களால் இங்கிலாந்து அணி பேட்ஸ்மென்கள் திணறினர்.
283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி வீரர்கள் கான்வே மற்றும் ரவீந்திரா இருவரும் நின்று விளையாடி 36.2 ஓவரில் இலக்கை எட்டினர்.
கான்வே 152 ரன்னும் ரவீந்திரா 123 ரன்னும் எடுத்து இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.